சர்வதேச கண்ணிவெடி விழிப்புணர்வு தினம் 2026 - ஏப்ரல் 04
April 6 , 2026 15 hrs 0 min 9 0
இந்தத் தினம் 2005 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் அறிவிக்கப் பட்டு, 2006 ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
நிலக் கண்ணிவெடிகளின் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதும், மக்களைப் பாதுகாப்பதற்காக அவற்றை அகற்றுவதற்கு ஆதரவளிப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும்.
'கண்ணிவெடி நடவடிக்கை' என்பது கண்ணிவெடிகளைக் கண்டறிந்து அகற்றுதல், பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவுதல் மற்றும் நிலத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்கு வழிவகை செய்தல் போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கியது.
கண்ணிவெடிகள், வெடிக்காத வெடிபொருட்கள் (UXO) மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் கருவிகள் (IEDs) போன்றவை மிகவும் ஆபத்தானவை; இவை போர்கள் முடிந்த பின்னரும் பொதுமக்களுக்கு ஊறு விளைவிக்கக்கூடியவை அல்லது உயிரைப் பறிக்கக்கூடியவை.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, "Invest in Peace; Invest in Mine Action" என்பதாகும்.