TNPSC Thervupettagam

சர்வதேச கழிவுகளில்லா தினம் 2026 – மார்ச் 30

April 1 , 2026 9 days 61 0
  • சிறந்த கழிவு மேலாண்மையை ஊக்குவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) மற்றும் UN-Habitat ஆகியவற்றால் இந்த தினம் ஏற்பாடு செய்யப் பட்டு உள்ளது.
  • கழிவு உற்பத்தியைக் குறைப்பதையும், நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தியை ஊக்குவிப்பதையும் இந்தத் தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஒவ்வொரு ஆண்டும், உலகம் சுமார் 2.1 முதல் 2.3 பில்லியன் டன் வரை நகர்புற திடக் கழிவுகளை உற்பத்தி செய்யும் நிலையில் இது 2050-ஆம் ஆண்டிற்குள் 3.8 பில்லியன் டன்களாக உயரக்கூடும்.
  • 2022-ஆம் ஆண்டில் சுமார் 1 பில்லியன் டன் உணவு வீணானது என்பதோடு இது மொத்த உணவில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்காகும்.
  • உணவு வீணாதல் உலகளாவியப் பசுமை இல்ல வாயு (GHG) வெளியேற்றத்தில் 10% வரையிலும், மீத்தேன் வெளியேற்றத்தில் சுமார் 14% வரையிலும் காரணமாகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்