TNPSC Thervupettagam

சர்வதேச கழுதைப் புலி தினம் 2025 - ஏப்ரல் 27

May 1 , 2025 67 days 109 0
  • மொத்தமாக நான்கு தனித்துவமான கழுதைப் புலி இனங்கள் உள்ளன.
  • இவற்றில் மத்தியக் கிழக்கு மற்றும் ஆசியாவிலும் காணப்படும் வரிகள் கொண்ட கழுதைப் புலிகள் (ஹைனா ஹைனா), பழுப்பு நிற கழுதைப் புலிகள் (பராஹ்யேனா ப்ரூனியா), நில ஓநாய் (புரோட்டீல்ஸ் கிறிஸ்டேட்டஸ்) மற்றும் புள்ளிகள் கொண்ட கழுதைப் புலிகள் (குரோகுட்டா குரோகுட்டா) ஆகியவை அடங்கும்.
  • புள்ளிகள் கொண்ட கழுதைப் புலிகள் என்பது ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதி முழுவதும் காணப்படும் நான்கு இனங்களில் மிகவும் பரவலான மற்றும் நன்கு ஆய்வு செய்யப்பட்டதாகும்.
  • இந்த விலங்குகள் ‘கிளான்ஸ்' எனப்படும் பெண் கழுதைப் புலிகளால் (ஆண் கழுதைப் புலிகளை விட பெரியவை மற்றும் வலிமையானவை) வழி நடத்தப் படும் வகையான வித்தியாசமான குழுக்களில் வாழ்கின்றன.
  • வடக்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் காணப்படும் வரிகள் கொண்ட கழுதைப் புலிகள், முதன்மையாக இரவு நேரங்களில் வாழ்பவை மற்றும் மிக தனிமையானவை ஆகும்.
  • இது இந்தியாவில் காணப்படும் மிகவும் பொதுவான இனமாகும்.
  • பழுப்பு நிற கழுதைப் புலிகள் முதன்மையாக தென்னாப்பிரிக்காவின் வறண்ட பாலை வனங்கள் மற்றும் புல்வெளிகளில்/சவானாக்களில் காணப்படுகிறது என்பதோடு இது பெரும்பாலும் இறந்த உயிரினங்களை உண்ணும் இனமாகும்.
  • மிகச்சிறிய மற்றும் மிகவும் சிறப்பு வாய்ந்த கழுதைப் புலிகள் நில ஓநாய்கள் ஆகும்.
  • அவை ஓநாய்களும் அல்ல அல்லது அவற்றுடன் தொடர்புடையவையும் அல்ல.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்