October 4 , 2025
28 days
48
- இது 2014 ஆம் ஆண்டில் சர்வதேச காபி அமைப்பினால் (ICO) நிறுவப்பட்டது.
- முதல் அதிகாரப்பூர்வக் கொண்டாட்டமானது இத்தாலியின் மிலனில் நடைபெற்ற 2015 ஆம் ஆண்டு கண்காட்சியின் போது நடத்தப்பட்டது.
- காபி கலாச்சாரத்தைக் கொண்டாடுவதையும் காபி விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Embrace Collaboration For Collective Action – More Than Ever" என்பதாகும்.
- பிரேசில் நாடானது, உலகின் மிகப்பெரிய காபி உற்பத்தியாளராக உள்ளது என்ற நிலையில் அதைத் தொடர்ந்து வியட்நாம் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் உள்ளன.
- உலகளாவிய காபி உற்பத்தியில் பயன்படுத்தப் படும் இரண்டு முக்கிய இனங்கள் அராபிகா மற்றும் ரோபஸ்டா ஆகியனவாகும்.

Post Views:
48