சர்வதேச கிராமப்புறப் பெண்கள் தினம் 2026 - அக்டோபர் 15
October 17 , 2026 5 days 69 0
இந்த தினமானது கிராமப்புற பெண்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதையும், அவர்களின் உரிமைகள், பொருளாதார அதிகாரமளித்தல், சுற்றுச்சூழல் தலைமை மற்றும் வளங்களுக்கான சமமான அணுகலை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Rural Women Farmers Caring for Mother Nature என்பதாகும்.
இது விதை பாதுகாப்பு, பல்லுயிர் பாதுகாப்பு, நீர் மேலாண்மை மற்றும் நிலச் சீரமைப்பு ஆகியவற்றில் கிராமப்புற பெண்களின் பங்கை அங்கீகரிக்கிறது.
நிலம், நீர், நிதி, சந்தைகள், தொழில்நுட்பம், விவசாய சேவைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கான சமமான அணுகலுக்கு இது அழைப்பு விடுக்கிறது.
2026 ஆம் ஆண்டானது பெண் விவசாயிகளின் சர்வதேச ஆண்டாகும், இது கிராமப்புற பெண்களின் உரிமைகள் மற்றும் தலைமையை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.