சர்வதேச குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள் தினம் - ஜூன் 27
June 28 , 2024 433 days 236 0
இந்தத் தினமானது இந்த நிறுவனங்களைக் கொண்டாடுவதோடு, அவற்றின் பெரும் முக்கியத்துவத்தை அங்கீகரித்து, அவற்றின் பங்களிப்புகளை வெளிக் கொணர்ந்து, அவற்றின் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவிக்கிறது.
முதல் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள் தினம் ஆனது 2017 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டது.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்கள் ஆனது உலகளவில் 90% வணிகங்கள், 60 முதல் 70% வேலைவாய்ப்பு மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% பங்கினைக் கொண்டுள்ளன.
2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை நிறுவனங்கள் மற்றும் நிலையான மேம்பாட்டு இலக்குகள்’ என்பதாகும்.