சர்வதேச குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்நுட்ப நிறுவனங்கள் தினம் - ஜூன் 27
June 28 , 2023 786 days 334 0
இந்தத் தினமானது, உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலையான மேம்பாடு ஆகியவற்றிற்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்களிப்பு குறித்துப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 06 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 74வது முழு அளவிலான கூட்டத்தில் இந்த நாள் உருவாக்கப்பட்டது.
உலகளவில் 90% வணிகங்கள், 60 முதல் 70% வேலைவாய்ப்பு மற்றும் 50% மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கினைக் கொண்டுள்ளன.