ஐக்கிய நாடுகள் அவையானது ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்தின் முதல் சனிக் கிழமையினை (2021 ஆம் ஆண்டில் ஜூலை 03) சர்வதேச கூட்டுறவு நிறுவனங்கள் தினமாகக் கடைபிடிக்கின்றது.
கூட்டுறவு நிறுவனங்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக இந்த தினமானது உருவாக்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டில், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் கூட்டுறவு நிறுவனங்களின் பங்களிப்பினை மையமாகக் கொண்டு சர்வதேச கூட்டுறவு நிறுவனங்கள் தினமானது அனுசரிக்கப்பட்டது.
இந்த ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, “Rebuild better together” என்பதாகும்.