சர்வதேச சதுப்பு நிலக் காடுகள் பாதுகாப்பு தினம் – ஜூலை 26
July 28 , 2019 2201 days 733 0
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 அன்று ஐக்கிய நாடுகளின் சர்வதேச சதுப்பு நிலக் காடுகள் பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகின்றது.
இத்தினமானது 2015 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் பொதுக் கருத்தரங்கினால் முதன்முறையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இத்தினமானது சதுப்பு நிலக் காடுகளின் சூழலமைப்பினை “ஒரு தனித்துவ, சிறப்பு மிக்க மற்றும் பாதிக்கப்படக்கூடிய சூழலமைப்பாக” இருப்பதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
புயல், சுனாமி, கடல் மட்ட உயர்வு மற்றும் கடல் அரிப்பு ஆகியவற்றிற்கு எதிரான ஒரு இயற்கைக் கடலோரப் பாதுகாப்பு அமைப்பாக சதுப்பு நிலக் காடுகள் செயல்படுகின்றன.
இவற்றின் மண் மிகவும் பயனுள்ள கரிமக் கருவூலங்களாக (கார்பனைப் பிடித்து வைத்தல்) இருக்கின்றன.