சர்வதேச சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டோருக்கான நினைவு தினம்
November 22 , 2018 2472 days 637 0
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை சர்வதேச சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டோருக்கான நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு (2018) நவம்பர் 18 ஆம் தேதி இத்தினம் அனுசரிக்கப் பட்டது.
2018 ஆம் ஆண்டிற்கான சர்வதேச சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டோருக்கான நினைவு தினத்தின் கருத்துருவானது “சாலைகள் கதைகளைக் கொண்டுள்ளன” என்பதாகும்.
உலகெங்கிலும் சாலை விபத்துகளால் இறந்து போன அல்லது காயமடைந்தவர்களை அவர்களது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டோர் ஆகியோருடன் இணைந்து இத்தினம் நினைவு கூறுகிறது.
மேலும் இத்தினம் அவசரச் சேவைகளுக்கு நன்றி கூறுகிறது.
இத்தினம் 1993 ஆம் ஆண்டில் சாலை அமைதி நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையானது இத்தினத்தை சர்வதேச அளவில் அனுசரிக்க வலியுறுத்தியது.