TNPSC Thervupettagam

சர்வதேச சிறுத்தைப் புலிகள் தினம் 2025 - மே 03

May 9 , 2025 6 days 70 0
  • இது சிறுத்தைப் புலிகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பு மற்றும் அதன் வளங்காப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சிறுத்தைப் புலிகள் என்பது வாழ்விடத்தைப் பொறுத்து அவற்றின் அளவு மற்றும் நிறம் மாறுகின்ற, அரிதான மற்றும் இரவு நேரத்தில் உலாவும் விலங்குகள் ஆகும்.
  • அவை ஆசியா, ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதிகள், தெற்கு ரஷ்யா மற்றும் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் பரவிக் காணப்படுகின்றன.
  • அவை IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் எளிதில் பாதிக்கப்படக் கூடியவையாக பட்டியலிடப்பட்டுள்ளன.
  • இந்தியாவில் காணப்படும் சிறுத்தைப் புலிகளின் எண்ணிக்கையானது 13,874 (வரம்பு: 12,616 – 15,132) என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • மத்தியப் பிரதேசத்தில் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான (3907) சிறுத்தைப் புலிகள் உள்ளன என்ற நிலையில் அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (1985), கர்நாடகா (1,879) மற்றும் தமிழ்நாடு (1,070) ஆகிய மாநிலங்களில் காணப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்