சர்வதேச சிவப்பு பாண்டா கரடி தினம் 2025 - செப்டம்பர் 20
September 25 , 2025 38 days 23 0
இது ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் 3வது சனிக்கிழமையன்று அனுசரிக்கப் படுகிறது.
அருகி வரும் சிவப்பு பாண்டா கரடிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் உலகளாவிய பாதுகாப்பு முன்னெடுப்புகளை ஊக்குவிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
சிவப்பு பாண்டா கரடிகள் நேபாளத்தின் உயரமான காடுகள், இந்தியா, பூடான், மியான்மர் மற்றும் சீனாவில் வாழ்கின்றன.
பிரம்மபுத்திராவின் பெரிய வளைவுப் பகுதி அவற்றின் மக்கள்தொகையை இமயமலை சிவப்பு பாண்டா கரடிகள் மற்றும் சீனச் சிவப்பு பாண்டா கரடிகள் எனப் பிரிக்கிறது.
சிவப்பு பாண்டா கரடிகள் 1990 ஆம் ஆண்டுகளில் சிக்கிமின் மாநில விலங்காக அறிவிக்கப் பட்டது என்பதோடு மேலும் டார்ஜிலிங் தேயிலை விழாவின் உருவச் சின்னமாகவும் அறிவிக்கப்பட்டது.
இது IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் அருகி வரும் விலங்காக பட்டியலிடப் பட்டு உள்ளது.