சர்வதேச சிவப்புப் பாண்டா தினம் – 18 செப்டம்பர்
September 19 , 2021
1432 days
405
- இது ஒவ்வோர் ஆண்டின் செப்டம்பர் மாதத்தினுடைய மூன்றாம் சனிக்கிழமையன்று அனுசரிக்கப் படுகிறது.
- இத்தினமானது 2010 ஆம் ஆண்டில் சிவப்புப் பாண்டா வலையமைப்பு என்ற ஒரு அமைப்பினால் தொடங்கப்பட்டது.
- சிவப்புப் பாண்டாக்களின் வாழ்விடங்களில் 50 சதவீதமானது கிழக்கு இமாலயப் பகுதிகளில் அமைந்துள்ளது.
- இது கிழக்கு இமாலயப் பகுதி மற்றும் வடமேற்கு சீனா ஆகிய பகுதிகளைப் பிறப்பிடமாகக் கொண்டது.
- இது IUCN சிவப்புப் பட்டியலில் அருகி வரும் ஒரு இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
- இந்த விலங்குகள் தனது வாழ்வின் பெரும்பகுதியை மரங்களிலேயேச் செலவிட்டு அவற்றிலேயே உறங்கவும் செய்கின்றன.
- அவை கூடு அமைக்கும் மரங்கள் மற்றும் மூங்கில்கள் ஆகியவற்றில் ஏற்பட்டுகின்ற அழிவானது சிவப்புப் பாண்டாக்களின் எண்ணிக்கையில் சரிவை ஏற்படுத்துகிறது.

Post Views:
405