சர்வதேச சிவப்புப் பாண்டாக் கரடி தினம் – செப்டம்பர் 19
September 25 , 2020 1922 days 674 0
இது சிவப்புப் பாண்டாக் கரடிகளின் பாதுகாப்பு விவகாரங்களுக்கு உதவுவதற்காகவும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமையன்று அனுசரிக்கப் படுகின்றது.
இந்தத் தினமானது 2010 ஆம் ஆண்டில் சிவப்புப் பாண்டா அமைப்பினால் தொடங்கப் பட்டது.
முதலாவது சர்வதேச சிவப்புப் பாண்டாக் கரடி தினமானது 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 அன்று அனுசரிக்கப்பட்டது.
சிவப்புப் பாண்டாவின் 2 தனித்துவ இனங்கள் பின்வருமாறு
அய்லுரஸ் புல்ஜென்ஸ் – பொதுவாக இமயமலை சிவப்புப் பாண்டா எனப்படும்.
அய்லுரஸ் புல்ஜென்ஸ் ஸ்தியானி – பொதுவாக சீன சிவப்புப் பாண்டா எனப்படும்.