சர்வதேச சிவிங்கிப் புலிகள் தினம் 2025 - டிசம்பர் 04
December 8 , 2025 17 days 63 0
சிவிங்கிப் புலிகளைப் பாதுகாப்பது மற்றும் அவற்றின் அழிவைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சிவிங்கிப் புலிகள் வளங்காப்பு நிதியத்தின் (CCF) நிறுவனர் டாக்டர் லாரி மார்க்கர் இந்த நாளை 2010 ஆம் ஆண்டில் தொடங்கினார்.
இந்தியா 1952 ஆம் ஆண்டில் சிவிங்கிப் புலிகளை அழிந்து விட்ட இனமாக அறிவித்து, அவற்றை மீண்டும் அறிமுகப்படுத்த 2022 ஆம் ஆண்டில் சிவிங்கிப் புலிகள் வளங் காப்புத் திட்டத்தைத் தொடங்கியது.
2025 ஆம் ஆண்டு நிலவரப் படி, இந்தியாவில் பிறந்த 21 குட்டிகள் உட்பட மொத்தம் 32 சிவிங்கிப் புலிகள் உள்ளன.
சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தால் (IUCN) சிவிங்கிப் புலிகள் எளிதில் பாதிக்கப் படக்கூடியவையாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.