சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினம் - டிசம்பர் 7
December 8 , 2019 2062 days 646 0
சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினமானது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப் படுகின்றது.
சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்தின் முக்கியத்துவம் குறித்த உலகளாவிய விழிப்புணர்வை உருவாக்குவதும் அதனை வலுப்படுத்துவதும் இத்தினத்தின் நோக்கமாகும்.
ICAOன் (International Civil Aviation Organization – சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பு) 50வது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 1994 ஆம் ஆண்டில் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினமானது நிறுவப்பட்டது.
இது ஐ.நா அமைப்பில் 1996 ஆம் ஆண்டில் ஐ.நா பொதுச் சபையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப் பட்டது.