இந்த தினமானது, பின்னாளில் உலக சுங்க அமைப்பாக (WCO) மாறிய சுங்க ஒத்துழைப்புக் குழுவின் (1953) முதல் அமர்வைக் குறிக்கிறது.
183 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ள உலக சுங்க அமைப்பின் தலைமையகம் பெல்ஜியத்தில் உள்ள பிரஸ்ஸல்ஸில் அமைந்துள்ளது.
சுங்க அதிகாரிகள் சர்வதேச வர்த்தகத்திற்கு வசதிகளை ஏற்படுத்துவதுடன் வருவாயைச் சேகரித்து, எல்லைப் பாதுகாப்பையும் உறுதி செய்கிறார்கள் என்பதோடு மேலும் கடத்தல் மற்றும் சட்டவிரோதப் பரிமாற்றத்தைத் தடுக்கின்றனர்.