2021 ஆம் ஆண்டில் சில மேற்கத்திய நாடுகள் தவிர பிற பகுதிகளில் சர்வதேச சுற்றுலா வருகையானது தேக்கமடைந்துள்ளது.
இது ஐக்கிய நாடுகள் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி மாநாட்டு அமைப்பு மற்றும் ஐ.நா.வின் உலக சுற்றுலா அமைப்பு ஆகியவற்றின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த தேக்க நிலையானது 2.4 டிரில்லியன் டாலர் அளவிலான வருமான இழப்பிற்கு வழி வகுக்கும் என இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐ.நா.வின் உலக சுற்றுலா அமைப்பானது பொறுப்புமிக்க, நிலையான மற்றும் உலகளவில் எளிதில் அணுகக் கூடிய வகையிலான சுற்றுலாவினை மேம்படுத்தச் செய்வதற்கான ஐ.நா.வின் சிறப்பு அமைப்பாகும்.
இதன் தலைமையகம் ஸ்பெயினிலுள்ள மேட்ரிட்டில் (Madrid) அமைந்துள்ளது.