TNPSC Thervupettagam

சர்வதேச சூரிய ஒளி சக்தி கூட்டிணைவு ஒப்பந்தம் – டென்மார்க்

June 27 , 2021 1500 days 664 0
  • டென்மார்க் சர்வதேச சூரிய ஒளி சக்தி கூட்டிணைவு ஒப்பந்தம் மற்றும் இந்தியாவுடனான உறுதி ஏற்பு ஒப்பந்தம் ஆகியவற்றில் கையெழுத்திட்டுள்ளது.
  • சர்வதேச சூரிய ஒளி சக்தி கூட்டிணைவு ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த பிறகு இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதலை வழங்கியுள்ள முதல் நாடு டென்மார்க் ஆகும்.

குறிப்பு

  • புதைபடிம எரிபொருட்கள் மீதான சார்பு நிலையைக் குறைப்பதற்கான முயற்சியில் சூரிய ஒளி சக்தியை திறம்படப் பயன்படுத்துவதற்கான ஒரு செயல்பாட்டை மேற்கொள்ளச் செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த ஒப்பந்தமானது உருவாக்கப் பட்டது.
  • 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வெம்ப்லே அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் ஆற்றிய உரையில் முதன்முதலாக இந்த முன்னெடுப்பினை அவர் முன்மொழிந்தார்.
  • மேலும் அவர் சூரிய ஒளியைப் பெறும் நாடுகளைசூரியப் புத்திரர்எனவும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்