- இத்தாலி அரசு சர்வதேச சூரிய ஒளிசக்தி கூட்டிணைவில் (ISA - International Solar Alliance) இணைவதற்காக இந்தியாவுடன் கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- சர்வதேச சூரிய ஒளிசக்தி கூட்டிணைவு (International Solar Alliance – ISA) ஆனது கட்டமைப்பு ஒப்பந்தத்தில் சில திருத்தங்கள் செய்ததை அடுத்து இத்தாலியக் குடியரசு ISA கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
- இத்திருத்தம் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அனைத்து உறுப்பினர் நாடுகளும் ISA அமைப்பின் உறுப்பினர் நிலையைப் பெறும் வகையில் வழிவகை செய்துள்ளது.
ISA: சர்வதேச சூரிய ஒளிசக்தி கூட்டிணைவு
- இது 121 நாடுகளை உள்ளடக்கிய ஒப்பந்த அடிப்படையிலான நாடுகளுக்கு இடையேயான ஒரு கூட்டிணைவு ஆகும்.
- இந்தக் கூட்டிணைவு இந்தியாவினால் தொடங்கப்பட்டது.
- பெரும்பாலான உறுப்பினர் நாடுகள் சூரிய ஒளியை அதிகம் பெறும் நாடுகளாகும்.
- அதிக சூரிய ஒளியைப் பெறும் நாடுகள் என்பவை முழுவதுமாக (அ) பகுதியளவாக கடகரேகைக்கும் மகர ரேகைக்கும் இடையே அமைந்துள்ள நாடுகள் ஆகும்.