நாட்டில் முன்னிலை வகிக்கும் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு ஸ்வச் சர்வெக்ஷான் கிராமின் விருதுகள் 2018-ஐ அண்மையில் பிரதமர் வழங்கினார்.
சிறந்த மாநிலமாக ஹரியானாவும் அதனைத் தொடர்ந்து குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகியவையும் உள்ளன.
சிறந்த மாவட்டமாக மஹாராஷ்டிராவின் சதாரா மாவட்டமும் அதனைத் தொடர்ந்து ரேவாரி (ஹரியானா) மற்றும் பெடப்பள்ளி (தெலுங்கானா) ஆகியவையும் இடம் பிடித்துள்ளன.
குடிமக்களின் அதிகபட்ச பங்களிப்பை வழங்கியதற்கான விருது உத்திரப்பிரதேசத்திற்கு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது.
குடிமக்களின் அதிகபட்ச பங்களிப்பை வழங்கிய மாவட்டத்திற்கான விருது மஹாராஷ்டிராவின் நாசிக்கிற்கும் அதனைத் தொடர்ந்து சோலாப்பூர் (மஹாராஷ்டிரா) மற்றும் சித்தோர்கர் (ராஜஸ்தான்) ஆகிய மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டது.
இந்தத் தரவரிசையானது மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் தேசிய ஸ்வச் சர்வெக்ஷான் கிராமின் 2018-ஐ அடிப்படையாகக் கொண்டது.