TNPSC Thervupettagam

சர்வதேச சூரியசக்தி கூட்டணி - தலைமைப் பொறுப்பில் இந்தியா

November 12 , 2026 4 days 77 0
  • புது தில்லியில் நடைபெற்ற பாரத் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உச்சி மாநாடு 2026-இன் ஒன்பதாவது கூட்டத்தொடரில், சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் (ISA) தலைவராக இந்தியா தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவும் பிரான்சும் இணைந்து 2015 ஆம் ஆண்டில் சர்வதேச சூரியசக்தி கூட்டணியைத் தொடங்கின; பிரான்ஸ் மீண்டும் இதன் இணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன் இந்தக் கூட்டணியில் 130 நாடுகள் கையொப்பமிட்டு உறுப்பினர்களாக உள்ளன.
  • ‘ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின்சாரக் கட்டமைப்பு’ (OSOWOG - One Sun, One World, One Grid) என்ற தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் சர்வதேச சூரிய ஆற்றல் ஒத்துழைப்பை இக்கூட்டணி ஊக்குவிக்கிறது.
  • ஆப்பிரிக்காவின் பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதை 200 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆப்பிரிக்க சூரியசக்தி வசதி நோக்கமாகக் கொண்டுள்ளது; இதற்கு இந்தியா சுமார் ₹225 கோடி (25 மில்லியன் அமெரிக்க டாலர்) நிதியுதவி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
  • 300 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நைஜீரியா பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிதியமானது, அங்கு பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் விரிவாக்கத்திற்கு ஆதரவளிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்