சர்வதேச சூரியசக்தி கூட்டணியில் சர்வதேச வான்வழிப் போக்குவரத்து அமைப்பு
October 6 , 2022 1141 days 512 0
கனடாவின் மாண்ட்ரீயல் நகரில் நடைபெற்ற சர்வதேச வான்வழிப் போக்குவரத்து அமைப்பின் 42வது அமர்வின் போது சர்வதேச வான்வழிப் போக்குவரத்து அமைப்பு (ICAO) சர்வதேச சூரிய சக்தி கூட்டணியுடன் (ISA) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
உலக வான்வழிப் போக்குவரத்துத் துறையில் சூரிய ஆற்றல் பயன்பாட்டிற்கான புதிய தொடக்கத்தை இந்நிகழ்வு குறிக்கிறது.
இது சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் அனைத்து உறுப்பினர் நாடுகளின் வான்வழிப் போக்குவரத்துத் துறையின் சூரியசக்திமயமாக்கலை செயல்படுத்தும்
இது வான்வழிப் போக்குவரத்துத் துறையில் இந்தியாவின் நிகரச் சுழிய உமிழ்வு இலக்குகளுக்கு வழி வகுக்கும் CO2 உமிழ்வுகளின் அதிகரிப்பினைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டது.