சர்வதேச சூரியசக்திக் கூட்டிணைவிற்குப் பார்வையாளர் அந்தஸ்து
December 14 , 2021 1352 days 625 0
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது சர்வதேச சூரியசக்தி கூட்டிணைவிற்குப் பார்வையாளர் அந்தஸ்தினை வழங்கியுள்ளது.
இந்தக் கூட்டிணைவானது சூரியசக்தி சார்ந்த தீர்வுகளைப் பயன்படுத்துவதன் மூலம் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான முயற்சிகளை ஒன்று திரட்டுவதற்காக இந்தியா மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டில் பாரீஸ் நகரில் நடத்தப்பட்ட பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு மாநாட்டில் பங்குதாரர் நாடுகளின் 21வது மாநாட்டில் இது பற்றி முன்வைக்கப் பட்டது.