சர்வதேச செர்னோபில் பேரிடர் நினைவு தினம் 2023 – ஏப்ரல் 26
April 30 , 2023 974 days 317 0
செர்னோபில் பேரழிவின் நினைவாக 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 08 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் இந்தத் தினம் நிறுவப்பட்டது.
இந்தப் பேரழிவில் உயிர் இழந்தவர்களின் நினைவாகவும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
செர்னோபில் பேரழிவு 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதியன்று முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் உள்ள உக்ரைன் நாட்டில் அமைந்த செர்னோபில் அணுமின் நிலையத்தில் நிகழ்ந்தது.
இந்த அணு உலையின் வழக்கமானப் பாதுகாப்புச் சோதனையின் போது இந்த விபத்து நடந்தது.