செவிலியர்களைக் கௌரவிப்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச செவிலியர்கள் தினமானது அனுசரிக்கப் படுகிறது.
சர்வதேச செவிலியர்கள் தினமானது 1965 ஆம் ஆண்டில் சர்வதேச செவிலியர்கள் மன்றத்தினால் தொடங்கப் பட்டது.
இந்தத் தினமானது பிரபலமான பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளாகும்.
இவர் இங்கிலாந்தைச் சேர்ந்த செவிலியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் புள்ளியியல் நிபுணராவார்.
இந்த ஆண்டிற்கான கருத்துரு, “A Voice to Lead A Vision for Future Healthcare” (எதிர்கால ஆரோக்கியத்திற்கான ஒரு தொலைநோக்குப் பார்வையை உருவாக்கச் செய்திட வேண்டி ஒரு குரல்) என்பதாகும்.