ஜாகுவார் மற்றும் அவற்றின் வளங்காப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்தத் தினத்தின் நோக்கமாகும்.
ஜாகுவார்களின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து அவற்றைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை ஆதரிப்பதே இந்த தினத்தின் நோக்கமாகும்.
இது முதன்முதலில் 2018 ஆம் ஆண்டில் பாந்தெரா (ஒரு பெரும்/காட்டுப் பூனை வளங் காப்பு அமைப்பு) தலைமையிலான உலகளாவிய வளங்காப்பு பணிகள் மூலம் கொண்டாடப் பட்டது.
இந்த அனுசரிப்பு 18 நாடுகளில் ஜாகுவார் நடமாட்டப் பாதைகளைப் பாதுகாக்கும் ஜாகுவார் வழித்தட முன்னெடுப்பினை ஏற்றுக் கொண்டதைக் குறிக்கிறது.
ஜாகுவார் (பாந்தெரா ஓன்கா) அமெரிக்காவின் மிகப்பெரிய பெரும் பூனைகள் ஆகும் என்பதோடுமேலும் இவை சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிக்க உதவுகின்றன.
ஜாகுவார் சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) செந்நிறப் பட்டியலில் அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.