சர்வதேச திருநர்களின் கட்புலன் நிலை தினம் - மார்ச் 31
March 31 , 2023 1000 days 359 0
இது உலகளவில் திருநர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் பற்றி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதோடுச் சமூகத்திற்கு அவர்கள் ஆற்றும் பங்களிப்பினையும் இத்தினம் கொண்டாடுகிறது.
2009 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் மிச்சிகனைச் சேர்ந்த திருநர் ஆர்வலரான ரேச்சல் கிராண்ட் என்பவரால் இந்தத் தினமானது நிறுவப் பட்டது.
இது அவர்களின் பங்களிப்புகள், வெற்றிகள் மற்றும் அநீதியை எதிர் கொண்டு நிமிர்ந்து நிற்பதில் அவர்களின் இடைவிடாத மீள்திறன் ஆகியவற்றினை அங்கீகரித்து மதிப்பளிக்கிறது.