1999 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினமானது கடைபிடிக்கப் படுகிறது.
தீயணைப்பு வீரர்கள் தங்களது சமூகமும் சுற்றுச்சூழலும் முடிந்தவரை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளும் தியாகங்களை அங்கீகரித்துக் கௌரவிப்பதற்காக இத்தினமானது கொண்டாடப்படுகிறது.
1998 ஆம் ஆண்டு டிசம்பர் 02 ஆம் தேதி ஆஸ்திரேலியாவிலுள்ள புல்வெளியில் ஏற்பட்ட மோசமான தீ விபத்தில் ஐந்து தீயணைப்பு வீரர்கள் இறந்ததை அடுத்து இந்தத் தினம் நிறுவப்பட்டது.