சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு சம்மேளனம் – உலக கோப்பை
October 25 , 2017 2812 days 1072 0
ஹீனா சித்து மற்றும் ஜீது ராய் ISSF (International Shooting Sport Federation) உலக கோப்பை இறுதி போட்டியில் 10மீட்டர் கலப்பு அணிக்கான துப்பாக்கி பிரிவில் தங்கம் வென்றனர்.
இந்தியா தனது வரலாற்றில் முதன்முறையாக இந்த போட்டியை நடத்துகின்றது.
காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற ராய் மற்றும் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற சித்து இருவரும் கூட்டாக இணைந்து தங்கள் மூன்றாவது தங்கத்தை வென்றனர். ஆனால் இவர்கள் இருவரும் இணைந்து ISSF உலக கோப்பையில் தங்கம் வெல்வது இதுவே முதன் முறையாகும்.
இந்த வருடத்தின் முதலில் இந்த கலப்பு அணி போட்டிகள் உலக கோப்பைகளுக்கான மாதிரி போட்டிகளாக நடத்தப்பட்டன.
2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இம்மாதிரி முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது.