இந்தத் தினமானது தெருவோரங்களில் வாழும் குழந்தைகளின் பல உரிமைகளைப் புறக்கணிக்க முடியாததை உறுதிப்படுத்தும் வகையில் குரல் கொடுக்கிறது.
யுனிசெஃப் அமைப்பானது தெருவோரக் குழந்தைகளை மூன்று பரந்தப் பிரிவுகளாகப் பிரித்துள்ளது:
தெருவோரங்களில் வேலை செய்யும் குழந்தைகள்: தங்கள் மிகப் பெரும்பாலான நேரத்தைத் தெருக்களில் செலவழித்து, தங்களைத் தற்காத்துக் கொண்டு, ஆனால் தவறாமல் வீடு திரும்பும் குழந்தைகள்.
குடும்பத்தோடுத் தெருவில் வாழும் குழந்தைகள்: பெயர் குறிப்பிடுவது போல, குடும்பத்துடன் தெருக்களில் வாழும் குழந்தைகள்.
தெருவோரங்களில் வாழும் குழந்தைகள்: தங்கள் குடும்பங்களை விட்டு வெளியேறி, தெருக்களில் வாழும் குழந்தைகள்.