இந்தியாவின் பரிந்துரையின் பேரில் உலகம் முழுவதும் மே 21 ஆம் தேதியன்று சர்வதேச தேநீர் தினமானது கடைபிடிக்கப்படுகிறது.
தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் தேயிலைப் பணியாளர்களின் நிலையை மேம்படுத்த முயற்சிப்பதே இந்த தினம் கடைபிடிக்கப் படுவதன் நோக்கமாகும்.
சர்வதேச தேநீர் தினத்திற்கு ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
உலகெங்கும் பரவியுள்ள தேநீரின் ஆழமான கலாச்சார மற்றும் பொருளாதார முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதும் பசி மற்றும் வறுமையை போக்குவதில் அதன் முக்கியத்துவத்தினை மேம்படுத்துவதுமே இதன் நோக்கமாகும்.