TNPSC Thervupettagam

சர்வதேச தேன் உண்ணும் கரடி தினம் 2026 - அக்டோபர் 17

October 18 , 2026 4 days 77 0
  • தேன் உண்ணும் கரடிகள், அவற்றின் வாழ்விடம் மற்றும் பாதுகாப்பு பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தேன் உண்ணும் கரடிகள் முக்கியமாக மத்திய மற்றும் தென் அமெரிக்காவின் வெப்ப மண்டலக் காடுகளில் காணப்படுகின்றன மற்றும் இவற்றில் இரண்டு விரல்கள் மற்றும் மூன்று விரல்கள் கொண்ட தேன் உண்ணும் கரடிகள் எனப் பிரிக்கப்பட்ட 6 வாழும் இனங்கள் உள்ளன.
  • பனாமாவின் இஸ்லா எஸ்குடோ டி வெராகுவாஸில் மட்டுமே காணப்படும் பிக்மி மூன்று விரல் தேன் உண்ணும் கரடி (பிராடிபஸ் பிக்மேயஸ்), இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியத்தால் (IUCN) மிக அருகி வரும் (CR) இனமாக பட்டியலிடப் பட்டுள்ளது.
  • மேன்ட் மூன்று விரல் தேன் உண்ணும் கரடி (பிராடிபஸ் டார்குவாடஸ்) எளிதில் பாதிக்கப்படக் கூடிய (VU) நிலையில் உள்ளது, அதே நேரத்தில் மற்ற நான்கு இனங்கள் IUCN செந்நிறப் பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த (LC) இனங்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.
  • இந்த நாள் 2010 ஆம் ஆண்டில் AIUNAU (ஒரு கொலம்பிய வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு) மூலம் நிறுவப்பட்டது.
  • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Sloths Wild and Free" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்