TNPSC Thervupettagam

சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டம் 2026

April 10 , 2026 2 days 51 0
  • இந்தியாவின் தேர்தல் முறையை உலகளாவியப் பிரதிநிதிகளுக்கு எடுத்துக்காட்டும் வகையில், இந்தியத் தேர்தல் ஆணையம் IEVP 2026 திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • ஒரு வெளிநாட்டுத் தொடர்புத் திட்டமான இதில் வெளிநாட்டுத் தேர்தல் அதிகாரிகள் இந்தியாவுக்கு வருகை தந்து, உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் தேர்தல் நடத்தப் படும் முறையை நேரடியாகப் பார்வையிடுவார்கள்.
  • தேர்தல்களில் வெளிப்படைத்தன்மை, நேர்மை, வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் நவீனத் தொழில்நுட்பத்தின் பயன்பாடு ஆகியவற்றை விளக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
  • 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் இத்திட்டத்தின் கீழ், பிரதிநிதிகள் அசாம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்குச் செல்வார்கள்.
  • அவர்கள் வாக்குச் சாவடிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கைச் சோதனை (VVPAT) ஆகியவற்றின் செயல்பாடுகளைப் பார்வையிடுவார்கள்.
  • அடிமட்ட அளவிலான தேர்தல் நிர்வாகத்தைப் புரிந்து கொள்ள, முதன்மைத் தேர்தல் அதிகாரிகள் (CEO) மற்றும் மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுடனான (DEO) சந்திப்புகள் நடத்தப்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்