TNPSC Thervupettagam

சர்வதேச தொழிலாளர் / மே தினம் - மே 01

May 2 , 2024 15 days 172 0
  • 1886 ஆம் ஆண்டில், தொழிலாளர்கள் தினசரி அடிப்படையிலான எட்டு மணி நேர வேலை நேரத்தினை நிர்ணயிக்க கோரி அமெரிக்காவில் ஒரு மிகப்பெரிய அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • சிகாகோவின் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் தொழிலாளர் கூட்டம் மீது குண்டுவீசித் தாக்கப் பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா முழுவதும் உள்ள தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைக் கோருவதற்கும் மற்றும் மேம்பட்ட வேலை/பணிச் சூழல்களுக்காகப் போராடுவதற்கும் ஒன்றிணைந்தனர்.
  • 1889 ஆம் ஆண்டில், செகண்ட் இன்டர்நேஷசனல் எனப்படுகின்ற சோசலிச மற்றும் தொழிலாளர் கட்சிகளின் உலகளாவியச் சங்கமானது பாரீஸ் நகரில் கூடி இந்த நாளை அறிவித்தது.
  • இந்தியாவில் முதல் தொழிலாளர் தினம் ஆனது 1923 ஆம் ஆண்டு மே 01 ஆம் தேதி அன்று சென்னையில் கொண்டாடப்பட்டது.
  • இந்துஸ்தானின் லேபர் கிசான் கட்சி தொடங்கப்பட்டு, தோழர் சிங்காரவேலர் இந்தக் கொண்டாட்டங்களுக்குத் தலைமை தாங்கினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்