சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஆளுகை அமைப்பிற்கு இதுவரை தலைமை வகித்த இந்திய நாட்டின் பதவிக் காலம் சமீபத்தில் முடிவடைந்தது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பினுடைய ஆளுகை அமைப்பின் தலைவராகப் பணியாற்றிய செயலாளர் (தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு) அபூர்வா சந்திராவினுடைய பதவிக் காலம் (அக்டோபர் 2020 – ஜுன் 2021) நிறைவடைந்தது.
35 ஆண்டு காலம் என்ற நீண்ட இடைவெளிக்குப் பிறகு சர்வதேச தொழிலாளர் அமைப்பினுடைய ஆளுகை அமைப்பின் தலைமைப் பொறுப்பினை இந்தியா ஏற்றுக் கொண்டிருந்தது.
குறிப்பு
ஸ்வீடன் நாட்டுத் தூதரான அன்னா ஜார்ட்ஃபெல்ட் மெல்வின் (Anna Jardfelt Melvin) என்பவர் இந்த அமைப்பின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
ரெனேட் ஹார்னுங்-டிராஸ் (Renate Hornung-Draus of Germany) என்பவர் பணி அளிப்பவர்களுக்கான பிரிவின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
கேட்டலின் பாஷியர் (Catelene Passchier) என்பவர் தொழிலாளர் பிரிவுக்கான துணைத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் வரலாற்றில் முதன்முறையாக அதன் ஆளுகை அமைப்பில் மூன்று பெண் தலைவர்களைக் கொண்டு அது இயங்க உள்ளது.