TNPSC Thervupettagam

சர்வதேச தொழிலாளர் மாநாடு

June 17 , 2026 14 hrs 0 min 28 0
  • 114வது சர்வதேச தொழிலாளர் மாநாடு (ILC) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்றது.
  • இந்த மாநாட்டை ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு முகமையான சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) ஏற்பாடு செய்தது.
  • இந்த மாநாட்டில் டிஜிட்டல் தளப் பொருளாதாரத்தில் கண்ணியமான வேலை, பணி இடத்தில் பாலினச் சமத்துவம், சமூக உரையாடல் மற்றும் முத்தரப்பு முறை குறித்து விவாதிக்கப்பட்டது.
  • சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) ஒரு முத்தரப்பு அமைப்பைப் பின்பற்றுகிறது, இதில் அரசாங்கங்கள், முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் முடிவெடுப்பதில் சமமாக பங்கேற்கின்றனர்.
  • சர்வதேச தொழிலாளர் மாநாடானது (ILC) சர்வதேச தொழிலாளர் தரங்களை அமைப்பதாலும், உலகளாவியத் தொழிலாளர் பிரச்சினைகளை விவாதிப்பதாலும் "தொழிலாளர்களின் உலக நாடாளுமன்றம்" என்று அழைக்கப்படுகிறது.
  • இந்த மாநாடு ILO-வின் முக்கியமான மேற்பார்வை வழிமுறையான தரநிலைகள் அமலாக்கக் குழுவின் 100 ஆண்டுகளையும் குறிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்