சர்வதேச நடுவர் தீர்ப்பாயம் - ரிலையன்ஸ் ஆற்றல் நிறுவனம்
August 28 , 2018 2445 days 810 0
ரிலையன்ஸ் ஆற்றல் என்ற நிறுவனமானது தனது சொந்தத் துணை நிறுவனமான ரிலையன்ஸ் பவர் நெதர்லாந்து BV என்ற நிறுவனம் பிரஸ்டீஜ் கேபிடல் ஹோல்டிங்ஸ் (செஷல்ஷை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம்) மற்றும் கோகோஸ் ஜியாங் ஆகிய நிறுவனங்களுக்கு எதிரான வழக்கில் சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்தால் 56 மில்லியன் இழப்பீடு பெற்றதாக அறிவித்துள்ளது.
இந்தோனேஷியாவில் உள்ள நிறுவனங்களின் நிலக்கரி சுரங்கம் தொடர்பான ஒப்பந்தப் பிரச்சனைக்காக நடுவர் தீர்ப்பாயத்தில் வழக்கு நடைபெற்றது.
இந்தோனேஷியாவில் உள்ள சுகிகோ குழுவின் உரிமையாளர் கோகோஸ் ஜியாங் ஆவார். இந்தோனேஷியாவில் 2010ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் நிறுவனமானது பொருளாதார சலுகைகளை இந்த நிறுவனத்தின் 3 நிலக்கரி சுரங்கங்களிலிருந்து பெற்றது.
நடுவர் தீர்ப்பாயமானது சிங்கப்பூரில் உள்ள சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மையத்தின் விதிகளின் படி (SIAC - Singapore International Arbitration Centre) ஏற்படுத்தப்பட்டது.