சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம்
November 5 , 2020
1739 days
742
- சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்தின் புதிய தலைவராக போர்ச்சுகல் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினரான டுவர்டே பச்சேகோ தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
- இதற்கு முந்தையத் தலைவர் மெக்சிகோவின் பாராளுமன்ற உறுப்பினர் கேப்ரியல் கியூவாஸ் பரோன் ஆவார்.
- இந்த ஒன்றியத்தின் தலைவரே அந்த அமைப்பின் அரசியல் தலைவராவார்.
- இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ளது.
- இது தேசியப் பாராளுமன்றங்களின் ஒரு உலகளாவிய அமைப்பாகும்.
- இது 1889 ஆம் ஆண்டில் உலகின் முதல் பலதரப்பு அரசியல் அமைப்பாக நிறுவப் பட்டது.
- இதன் முழக்கம் “ஜனநாயகத்திற்காக மற்றும் அனைவருக்காக” (For Democracy, For Everyone) என்பதாகும்.
- இதில் இந்தியாவை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்கள் பிரதிநிதித்துவப் படுத்தினார்.

Post Views:
742