சர்வதேச நாணய நிதியத்தின் உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கை
January 28 , 2022 1296 days 550 0
உலகப் பொருளாதார வளர்ச்சியானது முன்பு கணிக்கப்பட்டதை விட அரை சதவீதம் குறையும் என இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் 5.9% ஆக இருந்த வளர்ச்சியானது 2022 ஆம் ஆண்டில் 4.4% ஆக குறையும்.
இது 2023 ஆம் ஆண்டில் மேலும் 3.8% ஆக குறையும்.
சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்புப்படி, 2021-2022 ஆம் ஆண்டில் இந்தியா 9% அளவிலான வளர்ச்சியை அடையும்.
2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாத மதிப்பீட்டில், இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்புகள் என்பது ஆண்டிற்கு 9.5% ஆக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் ஆனது தற்போது 2022-23 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் ஆனது 9% வளர்ச்சியடையும் எனக் கணித்துள்ளது.
அக்டோபர் மாத மதிப்பீட்டில், 2022-23 ஆம் ஆண்டிற்கான வளர்ச்சி 8.5% ஆகவும் மற்றும் 2023-24 ஆம் ஆண்டிற்கான வளர்ச்சி 7.1% ஆகவும் இருக்கும் என்று கணிக்கப் பட்டது.