சர்வதேச நிலையங்கள் கழகத்தின் உலக விமானப் போக்குவரத்து அறிக்கை
September 25 , 2018 2513 days 772 0
சர்வதேச விமான நிலையங்கள் கழகத்தின் உலக விமானப் போக்குவரத்து அறிக்கையின்படி டெல்லியின் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையமானது உலகின் 16-வது பரபரப்பான விமான நிலையமாக இடம் பிடித்துள்ளது.
இந்த விமான நிலையமானது 2017-ல் 6.34 கோடி பயணிகளை கையாண்டுள்ளது.
இது 2016 ஆம் ஆண்டில் 22வது இடத்தில் இருந்தது மற்றும் 2017-ல் 14% அதிக பயணிகளை கையாண்டுள்ளது.
2017 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் அட்லாண்டா ஹார்ட்ஸ்ஃபீல்ட் - ஜாக்சன் விமான நிலையம் 10.39 கோடி பயணிகளை கையாண்டு உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையத்தின் இடத்தைப் பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 9.38 கோடி பயணிகளுடன் பீஜிங் இரண்டாம் இடத்தில் உள்ளது.
துபாய் சர்வதேச விமான நிலையமானது 8.82 கோடி பயணிகளைக் கையாண்டு மூன்றாம் இடத்தில் உள்ளது.