இந்தத் தினம் நீதிபதிகள் மற்றும் தலைமை நீதிபதிகளின் மனம் சார்ந்த, உணர்ச்சி மற்றும் உடல் நலவாழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
நவ்ரு பிரகடனத்தைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டில் இந்தத் தினம் முதன்முதலில் கொண்டாடப் பட்டது மற்றும் 2025 ஆம் ஆண்டில் ஐ.நா. சபையினால் இந்த தினம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
நலமான மன ஆரோக்கியத்தை உருவாக்குதல், நல்வாழ்வு கொள்கைகளை மேம்படுத்துதல் மற்றும் நல்வாழ்வை நீதித் தரத்துடன் இணைப்பது இதன் நோக்கம் ஆகும்.
உலகெங்கிலும் உள்ள சட்ட அமைப்புகளில் பேச்சுவார்த்தை மற்றும் நிறுவன மாற்றத்தை ஊக்குவிப்பதன் மூலம் உலகளாவிய நீதித்துறைச் சீர்திருத்தத்தை இது வலியுறுத்துகிறது.