சர்வதேச நீல வானுக்கான தூய காற்று தினம் - செப்டம்பர் 07
September 9 , 2023 732 days 269 0
காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேம்படுத்தச் செய்வதற்காகவும் எளிதாக்குவதற்காகவும் இந்தத் தினம் அனுசரிக்கப்படுகிறது.
கூட்டுப் பொறுப்பு ஏற்றல் மற்றும் கூட்டு நடவடிக்கையின் அவசியத்தை உணர்த்தும் உலக நாடுகளின் எல்லைக்கு அப்பாற்பட்ட காற்று மாசுபாட்டின் தன்மையில் இது கவனம் செலுத்துகிறது.
பூமியில் 99 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் அசுத்தமான காற்றை சுவாசிக்கச் செய்கின்றனர்.
இது ஆண்டுக்கு 6.7 மில்லியன் அகால (ஆயுட்காலத்திற்கு முன்பான இறப்பு) மரணங்கள் மற்றும் கடுமையான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு என்பது, “தூய்மையான காற்றிற்காக ஒன்றுபடுங்கள்” ஆகும்.