சர்வதேச நெகிழிக் கண்ணோட்டம் : 2060 ஆம் ஆண்டிற்கான கொள்கை நிலைகள்
June 9 , 2022 1157 days 484 0
இது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை ஆகும்.
2060 ஆம் ஆண்டுக்குள் உலகளவில் உற்பத்தியாகும் நெகிழிக் கழிவுகளின் அளவு மூன்று மடங்காக உயரும் என்று இதில் கண்டறியப்பட்டுள்ளது.
இதில் சுமார் பாதி நிலப்பரப்பில் குவிக்கப்படும் என்றும் இதில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே மறு சுழற்சி செய்யப்படும் என்றும் மதிப்பிடப் படுகிறது.
2060 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு நெகிழிக் கழிவுகள் பையகப் படுத்துதல், குறைந்த விலைப் பொருட்கள் மற்றும் ஜவுளிகள் போன்ற குறுகிய கால உபயோகப் பொருட்களிலிருந்து உருவாகியிருக்கும்.
ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் வளரும் மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில், இந்த வளர்ச்சி மிக வேகமாக இருக்கும்.
இருப்பினும், 2060 ஆம் ஆண்டில் OECD அல்லாத நாடுகளை விட (77 கிலோ) OECD நாடுகள் தனி நபர் வீதத்தில் அதிக நெகிழிக் கழிவுகளை (வருடத்திற்கு சராசரியாக 238 கிலோ) உற்பத்தி செய்யும் என்று இந்த அறிக்கை எடுத்துக் காட்டுகிறது.
பெரும்பாலான மாசுபாடுகள் மேக்ரோபிளாஸ்டிக்ஸ் எனப்படும் பெரிய அளவிலான குப்பை வகைகளிலிருந்து வருகிறது.
ஆனால் தொழில்துறை நெகிழித் துகள்கள், ஜவுளிகள் மற்றும் டயர் துண்டுகள் போன்ற பொருட்களிலிருந்து மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் வகை (5 மிமீ விட்டம் கொண்ட செயற்கைப் பாலிமர்கள்) கசிவதும் ஒரு தீவிர கவலையாக உள்ளது.