இந்த தினமானது ஜீரோ வேஸ்ட் யுரோப் எனும் அமைப்பினால் தொடங்கப் பட்டதாகும்.
சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி உயிரிச் சிதைவுக்கு உட்படாத நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு எதிரான ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்தச் செய்வதற்காக இந்த தினமானது கடைப்பிடிக்கப்படுகிறது.
நமது அன்றாடப் பயன்பாட்டிலிருந்து ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிகளை அகற்றச் செய்வதையே இந்த அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.