TNPSC Thervupettagam

சர்வதேச நைட்ரஜன் முன்னெடுப்பு மாநாடு

June 9 , 2021 1527 days 734 0
  • சமீபத்தில் 8வது சர்வதேச நைட்ரஜன் முன்னெடுப்பு மாநாடானது காணொலி வாயிலாக நடைபெற்றது.
  • இது சுற்றுச்சுழல் பிரச்சினைகள் மீதான அறிவியல் குழு மற்றும் சர்வதேசப் புவியியல் – உயிர்க் கோளத் திட்டம் ஆகியவற்றின் நிதியுதவியின் கீழ் 2003 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
  • இது மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒரு நிகழ்வாகும்.
  • இது வேளாண்மை, தொழில்துறை, போக்குவரத்து, மண், நீர் மற்றும் காற்று போன்றவற்றில் காணப்படும் எதிர்வினை செயல்திறனுடைய நைட்ரஜன் (reactive nitrogen) மூலக்கூறுகளை கையாளும் உலக அறிவியலாளர்களை ஒன்று திரட்டுகிறது.
  • ஒரு எதிர்வினை செயல்திறனுடைய நைட்ரஜனைக் கையாள வேண்டி வருங்காலத்திற்கான முழுமையான மேலாண்மையை மேம்படுத்துவதற்காக முடிவுகள், கருத்துகள் மற்றும் நோக்கங்கள் போன்றவற்றை கொள்கை வகுப்பு அமைப்புகள் மற்றும் அது சார்ந்த பிற பங்குதாரர்களிடையே பரிமாறிக் கொள்வதை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.
  • இந்தத் திட்டமானது தற்போது Future Earth அமைப்பின் நீண்டகால பங்குதாரர் ஆக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்