இந்தியாவின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான மத்திய அமைச்சர் ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமையின் (IRENA) 16வது மாநாட்டில் பங்கேற்றார்.
IRENA என்பது உலகளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக 2009 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஓர் அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.
கொள்கை, தொழில்நுட்பம் மற்றும் நிதி சார் அறிவைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் நிலையான எரிசக்தி சார்ந்த எதிர்காலத்திற்கு மாறுவதில் உலக நாடுகளை இது ஆதரிக்கிறது.
IRENA தலைமையகம் அபுதாபி, UAE மற்றும் 170 உறுப்பினர் நாடுகளைக் கொண்டு உள்ளது (169 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU)) என்பதோடுஇந்தியா இதன் ஒரு ஸ்தாபன உறுப்பினர் நாடாகும்.
IRENA ஐக்கிய நாடுகள் சபையின் (UN) அதிகாரப்பூர்வப் பார்வையாளர் அமைப்பாகும்.