TNPSC Thervupettagam

சர்வதேச புலிகள் தினம் 2026 - ஜூலை 29

July 30 , 2026 3 days 99 0
  • புலிகள் பாதுகாப்பு மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உலகளாவிய காட்டுப் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கான Tx2 இலக்கை இந்தியா உட்பட 13 புலிகள் வாழும் நாடுகள் தொடங்கிய செயின்ட் பீட்டர்ஸ்பர்க் புலிகள் உச்சிமாநாட்டில் (ரஷ்யா) 2010 ஆம் ஆண்டில் இந்த தினம் நிறுவப் பட்டது.
  • புலிகள் வேட்டையாடும் விலங்குகளில் முதன்மையாக உள்ளன மற்றும் ஆரோக்கியமான வனச் சூழலமைப்புகளைப் பராமரிக்க உதவும் ஒரு முக்கிய இனமாகும்; சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம் (IUCN) இவற்றை அருகி வரும் இனமாகப் பட்டியலிட்டுள்ளது.
  • உலகில் உள்ள காட்டுப் புலிகளில் சுமார் 75% புலிகள் இந்தியாவில் உள்ளன. மேலும் புலிகளைப் பாதுகாக்கவும் வேட்டையாடுவதைக் கட்டுப்படுத்தவும் 1973 ஆம் ஆண்டில் 'புலிகள் பாதுகாப்புத் திட்டத்தை' இந்தியா தொடங்கியது.
  • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Securing the Future of Tigers with Indigenous Peoples and Local Communities at the Heart" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்