இந்த தினமானது பெண்களின் உரிமைகள், அதிகாரமளித்தல் மற்றும் சம வாய்ப்புகளை மேம்படுத்துவதையும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வு காண்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “End child marriage and invest in girls’ rights!” என்பதாகும்.
இந்த தினமானது 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 19 அன்று தீர்மானத்தின் மூலம் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் (UNGA) அறிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் 12 மில்லியனுக்கும் அதிகமான சிறுமிகள் வயது முதிர்வை அடையும் முன்பே திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர்.
பெண்களின் கல்வி, சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றிலான முதலீடுகள் மூலம் கடந்த 25 ஆண்டுகளில் 68 மில்லியன் குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.