சர்வதேச பொது விமானப் போக்குவரத்து தினம் 2025 - டிசம்பர் 07
December 10 , 2025 15 days 86 0
இந்த நாள் ஆனது, சர்வதேச பொது விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) ஸ்தாபனத்தைக் குறிக்கிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Safe Skies. Sustainable Future: Together for All" என்பதாகும்.
மக்களை இணைப்பதிலும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும், பாதுகாப்பான மற்றும் திறம் மிக்க உலகளாவிய விமானப் போக்குவரத்தை உறுதி செய்வதிலும் பொது விமானப் போக்குவரத்தின் பங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.
1944 ஆம் ஆண்டு சிகாகோ உடன்படிக்கையின் தோற்றத்தைக் குறிக்கின்ற இந்த நாள் ஆனது 1996 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் (UN) அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.